அறத்துப்பால் · துறவறவியல்
31. வெகுளாமை
குறள் 301–310
- குறள் 301செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்காக்கினென் காவாக்கா லென்.
- குறள் 302செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற.
- குறள் 303மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீயபிறத்தல் அதனான் வரும்.
- குறள் 304நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்பகையும் உளவோ பிற.
- குறள் 305தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்தன்னையே கொல்லுஞ் சினம்.
- குறள் 306சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.
- குறள் 307சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடுநிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
- குறள் 308இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்புணரின் வெகுளாமை நன்று.
- குறள் 309உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்உள்ளான் வெகுளி யெனின்.
- குறள் 310இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை.