அறத்துப்பால் · துறவறவியல் · வெகுளாமை

குறள் 302வெகுளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்இல்லதனின் தீய பிற.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 61 · ஸ்கேன் 94 · மூலமும் சான்றும்