குறள் 306 — வெகுளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்ஏமப் புணையைச் சுடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 62 · ஸ்கேன் 95 · மூலமும் சான்றும்