அறத்துப்பால் · துறவறவியல்

30. வாய்மை

குறள் 291300
  1. குறள் 291
    வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்தீமை யிலாத சொலல்.
  2. குறள் 292
    பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்தநன்மை பயக்கு மெனின்.
  3. குறள் 293
    தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
  4. குறள் 294
    உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்உள்ளத்து ளெல்லாம் உளன்.
  5. குறள் 295
    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடுதானஞ்செய் வாரின் தலை.
  6. குறள் 296
    பொய்யாமை யன்ன புகழில்லை எய்யாமைஎல்லா அறமுந் தரும்.
  7. குறள் 297
    பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிறசெய்யாமை செய்யாமை நன்று.
  8. குறள் 298
    புறந்தூய்மை நீரா னமையும் அகந்தூய்மைவாய்மையால் காணப் படும்.
  9. குறள் 299
    எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்பொய்யா விளக்கே விளக்கு.
  10. குறள் 300
    யாமெய்யாக் கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற.