அறத்துப்பால் · துறவறவியல்
29. கள்ளாமை
குறள் 281–290
- குறள் 281எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
- குறள் 282உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வே மெனல்.
- குறள் 283களவினா லாகிய ஆக்கம் அளவிறந்தாவது போலக் கெடும்.
- குறள் 284களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்வீயா விழுமந் தரும்.
- குறள் 285அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்பொச்சாப்புப் பார்ப்பார்க ணில்.
- குறள் 286அளவின்கண் நின்றொழுக லாற்றார் களவின்கண்கன்றிய காத லவர்.
- குறள் 287களவென்னுங் காரறி வாண்மை அளவென்னும்ஆற்றல் புரிந்தார்க ணில்.
- குறள் 288அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்குங்களவறிந்தார் நெஞ்சில் கரவு.
- குறள் 289அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்லமற்றைய தேற்றா தவர்.
- குறள் 290கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தே ளுலகு.