அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமை

குறள் 290கள்ளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்தள்ளாது புத்தே ளுலகு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

களவாடுபவர்க்கு உயிர் வாழ்வதேகூடத் தவறிப்போகும்; களவை நினைத்தும் பார்க்காதவர்க்கோ, புகழுலக வாழ்க்கை தவறவே தவறாது.

மூலம் · அச்சுப் பக்கம் 58 · ஸ்கேன் 91 · மூலமும் சான்றும்