அறத்துப்பால் · துறவறவியல் · வாய்மை

குறள் 291வாய்மை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றுந்தீமை யிலாத சொலல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.

மூலம் · அச்சுப் பக்கம் 59 · ஸ்கேன் 92 · மூலமும் சான்றும்