அறத்துப்பால் · துறவறவியல் · கள்ளாமை

குறள் 282கள்ளாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உள்ளத்தால் உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்கள்ளத்தால் கள்வே மெனல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறருக்குரிய பொருளைச் சூழ்ச்சியினால் கவர்ந்து கொள்ளலாமா என்று ஒருவன் நினைப்பதேகூடக் குற்றமாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 57 · ஸ்கேன் 90 · மூலமும் சான்றும்