குறள் 281 — கள்ளாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
எள்ளாமை வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங்கள்ளாமை காக்கதன் நெஞ்சு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
எந்தப் பொருளையும் களவாடும் நினைவு தன் நெஞ்சை அணுகாமல் பார்த்துக் (காத்துக்) கொள்பவனே இகழ்ச்சிக்கு ஆட்படாமல் வாழ முடியும்.
மூலம் · அச்சுப் பக்கம் 57 · ஸ்கேன் 90 · மூலமும் சான்றும்