குறள் 280 — கூடா ஒழுக்கம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்த தொழித்து விடின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உலகத்தாரின் பழிப்புக்கு உள்ளாகும் செயல்களைத் துறக்காமல் ஒரு துறவி, தனது தலையை மொட்டையடித்துக் கொண்டோ, சடாமுடி வளர்த்துக் கொண்டோ கோலத்தை மட்டும் மாற்றிக் கொள்வது ஒரு ஏமாற்று வித்தையே ஆகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 56 · ஸ்கேன் 89 · மூலமும் சான்றும்