அறத்துப்பால் · துறவறவியல்
28. கூடா ஒழுக்கம்
குறள் 271–280
- குறள் 271வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்ஐந்தும் அகத்தே நகும்.
- குறள் 272வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்னெஞ்சத்தானறி குற்றப் படின்.
- குறள் 273வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
- குறள் 274தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்துவேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
- குறள் 275பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்றேதம் பலவுந் தரும்.
- குறள் 276நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்துவாழ்வாரின் வன்கணா ரில்.
- குறள் 277புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றிமூக்கிற் கரியா ருடைத்து.
- குறள் 278மனத்தது மாசாக மாண்டார்நீ ராடிமறைந்தொழுகு மாந்தர் பலர்.
- குறள் 279கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்னவினைபடு பாலாற் கொளல்.
- குறள் 280மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்பழித்த தொழித்து விடின்.