அறத்துப்பால் · துறவறவியல்

27. தவம்

குறள் 261270
  1. குறள் 261
    உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமைஅற்றே தவத்திற் குரு.
  2. குறள் 262
    தவமுந் தவமுடையார்க் காகும் அவமதனைஅஃதிலார் மேற்கொள் வது.
  3. குறள் 263
    துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொன்மற்றை யவர்கள் தவம்.
  4. குறள் 264
    ஒன்னார்த் தெறலும் உவந்தாரை யாக்கலும்எண்ணின் தவத்தான் வரும்.
  5. குறள் 265
    வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்ஈண்டு முயலப் படும்.
  6. குறள் 266
    தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.
  7. குறள் 267
    சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.
  8. குறள் 268
    தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனையமன்னுயி ரெல்லாந் தொழும்.
  9. குறள் 269
    கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலின்ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
  10. குறள் 270
    இலர்பல ராகிய காரணம் நோற்பார்சிலர்பலர் நோலா தவர்.