அறத்துப்பால் · துறவறவியல்
26. புலால் மறுத்தல்
குறள் 251–260
- குறள் 251தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.
- குறள் 252பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.
- குறள் 253படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்உடல்சுவை யுண்டார் மனம்.
- குறள் 254அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்பொருளல்ல தவ்வூன் தினல்.
- குறள் 255உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ணஅண்ணாத்தல் செய்யா தளறு.
- குறள் 256தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.
- குறள் 257உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்புண்ண துணர்வார்ப் பெறின்.
- குறள் 258செயிரின் தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன்.
- குறள் 259அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.
- குறள் 260கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பிஎல்லா உயிருந் தொழும்.