அறத்துப்பால் · துறவறவியல் · புலால் மறுத்தல்

குறள் 252புலால் மறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சிஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பொருளைப் பேணிக் காத்திடாதவர்க்குப் பொருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை; புலால் உண்பவர்க்கும் அருள் உடையவர் என்னும் சிறப்பு இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 51 · ஸ்கேன் 84 · மூலமும் சான்றும்