அறத்துப்பால் · துறவறவியல் · புலால் மறுத்தல்

குறள் 251புலால் மறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்எங்ஙனம் ஆளும் அருள்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 51 · ஸ்கேன் 84 · மூலமும் சான்றும்