அறத்துப்பால் · துறவறவியல் · புலால் மறுத்தல்

குறள் 256புலால் மறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தினற்பொருட்டால் கொல்லா துலகெனின் யாரும்விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.

மூலம் · அச்சுப் பக்கம் 52 · ஸ்கேன் 85 · மூலமும் சான்றும்