குறள் 259 — புலால் மறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்உயிர்செகுத் துண்ணாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.
மூலம் · அச்சுப் பக்கம் 52 · ஸ்கேன் 85 · மூலமும் சான்றும்