அறத்துப்பால் · துறவறவியல்

25. அருளுடைமை

குறள் 241250
  1. குறள் 241
    அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்பூரியார் கண்ணு முள.
  2. குறள் 242
    நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்தேரினும் அஃதே துணை.
  3. குறள் 243
    அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்தஇன்னா உலகம் புகல்.
  4. குறள் 244
    மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்பதன்னுயி ரஞ்சும் வினை.
  5. குறள் 245
    அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி.
  6. குறள் 246
    பொருள்நீங்கிப் பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கிஅல்லவை செய்தொழுகு வார்.
  7. குறள் 247
    அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.
  8. குறள் 248
    பொருளற்றார் பூப்ப ரொருகால் அருளற்றார்அற்றார்மற் றாதல் அரிது.
  9. குறள் 249
    தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்அருளாதான் செய்யும் அறம்.
  10. குறள் 250
    வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்மெலியார்மேற் செல்லு மிடத்து.