அறத்துப்பால் · துறவறவியல் · அருளுடைமை

குறள் 247அருளுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கிவ்வுலகம் இல்லாகி யாங்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பொருள் இல்லாதவர்களுக்கு இம்மை வாழ்க்கை சிறப்பாக இராது. அதுபோலவே கருணை உள்ளம் இல்லாதவர்களின் துறவற வாழ்க்கையும் சிறப்பாக அமையாது.

மூலம் · அச்சுப் பக்கம் 50 · ஸ்கேன் 83 · மூலமும் சான்றும்