அறத்துப்பால் · இல்லறவியல்
24. புகழ்
குறள் 231–240
- குறள் 231ஈத லிசைபட வாழ்தல் அதுவல்லதூதிய மில்லை உயிர்க்கு.
- குறள் 232உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்றீவார்மேல் நிற்கும் புகழ்.
- குறள் 233ஒன்றா உலகத் துயர்ந்த புகழல்லாற்பொன்றாது நிற்பதொன் றில்.
- குறள் 234நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்போற்றாது புத்தே ளுலகு.
- குறள் 235நத்தம்போல் கேடும் உளதாகுஞ் சாக்காடும்வித்தகர்க் கல்லால் அரிது.
- குறள் 236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.
- குறள் 237புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மைஇகழ்வாரை நோவ தெவன்.
- குறள் 238வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின்.
- குறள் 239வசையிலா வண்பயன் குன்றும் இசையிலாயாக்கை பொறுத்த நிலம்.
- குறள் 240வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழியவாழ்வாரே வாழா தவர்.