அறத்துப்பால் · இல்லறவியல்

23. ஈகை

குறள் 221230
  1. குறள் 221
    வறியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாங்குறியெதிர்ப்பை நீர துடைத்து.
  2. குறள் 222
    நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.
  3. குறள் 223
    இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.
  4. குறள் 224
    இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்இன்முகங் காணு மளவு.
  5. குறள் 225
    ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியைமாற்றுவா ராற்றலிற் பின்.
  6. குறள் 226
    அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்பெற்றான் பொருள்வைப் புழி.
  7. குறள் 227
    பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னுந்தீப்பிணி தீண்ட லரிது.
  8. குறள் 228
    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழக்கும் வன்க ணவர்.
  9. குறள் 229
    இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.
  10. குறள் 230
    சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈத லியையாக் கடை.