அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகை

குறள் 229ஈகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பியதாமே தமியர் உணல்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறர்க்கு ஈவதால் குறையக் கூடுமென்று, குவித்து வைத்துள்ளதைத் தாமே உண்பது என்பது கையேந்தி இரந்து நிற்பதைக் காட்டிலும் கொடுமையானது.

மூலம் · அச்சுப் பக்கம் 46 · ஸ்கேன் 79 · மூலமும் சான்றும்