அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகை

குறள் 222ஈகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

நல்லா றெனினுங் கொளல்தீது மேலுலகம்இல்லெனினும் ஈதலே நன்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

பிறரிடமிருந்து நல்வழியில் பொருளைப் பெற்றாலும் அது பெருமையல்ல. சிறுமையே ஆகும். கொடை வழங்குவதால் மேலுலகம் என்று சொல்லப்படுவது கிட்டிவிடப் போவதில்லை; எனினும் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 45 · ஸ்கேன் 78 · மூலமும் சான்றும்