அறத்துப்பால் · இல்லறவியல் · ஈகை

குறள் 223ஈகை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே யுள.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தமக்குள்ள வறுமைத் துன்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் பிறர்க்கு ஈவது உயர்ந்த குடிப்பிறந்தவரின் பண்பாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 45 · ஸ்கேன் 78 · மூலமும் சான்றும்