அறத்துப்பால் · இல்லறவியல்
22. ஒப்புரவறிதல்
குறள் 211–220
- குறள் 211கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டென்னாற்றுங் கொல்லோ உலகு.
- குறள் 212தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்குவேளாண்மை செய்தற் பொருட்டு.
- குறள் 213புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதேஒப்புரவின் நல்ல பிற.
- குறள் 214ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.
- குறள் 215ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.
- குறள் 216பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.
- குறள் 217மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்பெருந்தகை யான்கண் படின்.
- குறள் 218இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்கடனறி காட்சி யவர்.
- குறள் 219நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர்செய்யா தமைகலா வாறு.
- குறள் 220ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன்விற்றுக்கோள் தக்க துடைத்து.