குறள் 216 — ஒப்புரவறிதல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்நயனுடை யான்கண் படின்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஈர நெஞ்சம் கொண்டவனிடம் செல்வம் சேருமேயானால் அது, ஊரின் நடுவே செழித்து வளர்ந்த மரம், பழுத்துக் குலுங்குவது போல எல்லோர்க்கும் பயன்படுவதாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 44 · ஸ்கேன் 77 · மூலமும் சான்றும்