அறத்துப்பால் · இல்லறவியல்
21. தீவினையச்சம்
குறள் 201–210
- குறள் 201தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை யென்னுஞ் செருக்கு.
- குறள் 202தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.
- குறள் 203அறிவினு ளெல்லாந் தலையென்ப தீயசெறுவார்க்குஞ் செய்யா விடல்.
- குறள் 204மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.
- குறள் 205இலனென்று தீயவை செய்யற்க செய்யின்இலனாகும் மற்றுப் பெயர்த்து.
- குறள் 206தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பாலதன்னை அடல்வேண்டா தான்.
- குறள் 207எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகைவீயாது பின்சென் றடும்.
- குறள் 208தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று.
- குறள் 209தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்துன்னற்க தீவினைப் பால்.
- குறள் 210அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்தீவினை செய்யான் எனின்.