அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்

குறள் 201தீவினையச்சம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்தீவினை யென்னுஞ் செருக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 41 · ஸ்கேன் 74 · மூலமும் சான்றும்