குறள் 202 — தீவினையச்சம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தீயவை தீய பயத்தலால் தீயவைதீயினும் அஞ்சப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தீய செயல்களால் தீமையே விளையும் என்பதால் அச்செயல்களைத் தீயைவிடக் கொடுமையானவையாகக் கருதி அவற்றைச் செய்திட அஞ்ச வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 41 · ஸ்கேன் 74 · மூலமும் சான்றும்