அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்

குறள் 204தீவினையச்சம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

மறந்தும்கூட மற்றவர்க்குக் கேடு செய்ய நினைக்கக் கூடாது; அப்படி நினைத்தால் அவனுக்குக் கேடு உண்டாக்க அவனை அறம் முற்றுகையிட்டு விடும்.

மூலம் · அச்சுப் பக்கம் 41 · ஸ்கேன் 74 · மூலமும் சான்றும்