அறத்துப்பால் · இல்லறவியல் · தீவினையச்சம்

குறள் 208தீவினையச்சம்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயா தடியுறைந் தற்று.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவருடைய நிழல் அவருடனேயே ஒன்றியிருப்பதைப்போல், தீய செயல்களில் ஈடுபடுகிறவர்களை விட்டு தீமையும் விலகாமல், தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 42 · ஸ்கேன் 75 · மூலமும் சான்றும்