அறத்துப்பால் · இல்லறவியல்

20. பயனில சொல்லாமை

குறள் 191200
  1. குறள் 191
    பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்.
  2. குறள் 192
    பயனில பல்லார்முன் சொல்லல் நயனிலநட்டார்கட் செய்தலிற் றீது.
  3. குறள் 193
    நயனில னென்பது சொல்லும் பயனிலபாரித் துரைக்கும் உரை.
  4. குறள் 194
    நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்பண்பில்சொல் பல்லா ரகத்து.
  5. குறள் 195
    சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனிலநீர்மை யுடையார் சொலின்.
  6. குறள் 196
    பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி யெனல்.
  7. குறள் 197
    நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்பயனில சொல்லாமை நன்று.
  8. குறள் 198
    அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்பெரும்பய னில்லாத சொல்.
  9. குறள் 199
    பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்தமாசறு காட்சி யவர்.
  10. குறள் 200
    சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்கசொல்லிற் பயனிலாச் சொல்.