அறத்துப்பால் · இல்லறவியல்
19. புறங்கூறாமை
குறள் 181–190
- குறள் 181அறங்கூறா நல்ல செயினும் ஒருவன்புறங்கூறா என்றல் இனிது.
- குறள் 182அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.
- குறள் 183புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்அறங்கூறும் ஆக்கந் தரும்.
- குறள் 184கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்கமுன்னின்று பின்னோக்காச் சொல்.
- குறள் 185அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்புன்மையாற் காணப் படும்.
- குறள் 186பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்திறன்தெரிந்து கூறப் படும்.
- குறள் 187பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லிநட்பாடல் தேற்றா தவர்.
- குறள் 188துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினார்என்னைகொல் ஏதிலார் மாட்டு.
- குறள் 189அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்புன்சொ லுரைப்பான் பொறை.
- குறள் 190ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்தீதுண்டோ மன்னு முயிர்க்கு.