அறத்துப்பால் · இல்லறவியல் · புறங்கூறாமை

குறள் 182புறங்கூறாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறனழீஇ யல்லவை செய்தலின் தீதேபுறனழீஇப் பொய்த்து நகை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச் சிரித்துப் பேசிவிட்டு, அவர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றிப் பொல்லாங்கு பேசுவது அறவழியைப் புறக்கணித்துவிட்டு, அதற்கு மாறான காரியங்களைச் செய்வதைவிடக் கொடுமையானது.

மூலம் · அச்சுப் பக்கம் 37 · ஸ்கேன் 70 · மூலமும் சான்றும்