அறத்துப்பால் · இல்லறவியல் · புறங்கூறாமை

குறள் 181புறங்கூறாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அறங்கூறா நல்ல செயினும் ஒருவன்புறங்கூறா என்றல் இனிது.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது.

மூலம் · அச்சுப் பக்கம் 37 · ஸ்கேன் 70 · மூலமும் சான்றும்