அறத்துப்பால் · இல்லறவியல்

18. வெஃகாமை

குறள் 171180
  1. குறள் 171
    நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்குற்றமும் ஆங்கே தரும்.
  2. குறள் 172
    படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்நடுவன்மை நாணு பவர்.
  3. குறள் 173
    சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரேமற்றின்பம் வேண்டு பவர்.
  4. குறள் 174
    இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்றபுன்மையில் காட்சி யவர்.
  5. குறள் 175
    அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்வெஃகி வெறிய செயின்.
  6. குறள் 176
    அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்பொல்லாத சூழக் கெடும்.
  7. குறள் 177
    வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்மாண்டற் கரிதாம் பயன்.
  8. குறள் 178
    அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமைவேண்டும் பிறன்கைப் பொருள்.
  9. குறள் 179
    அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்திறனறிந் தாங்கே திரு.
  10. குறள் 180
    இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்வேண்டாமை யென்னுஞ் செருக்கு.