அறத்துப்பால் · இல்லறவியல்

17. அழுக்காறாமை

குறள் 161170
  1. குறள் 161
    ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்தழுக்கா றிலாத இயல்பு.
  2. குறள் 162
    விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்.
  3. குறள் 163
    அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்பேணா தழுக்கறுப் பான்.
  4. குறள் 164
    அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து.
  5. குறள் 165
    அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்வழுக்கியுங் கேடீன் பது.
  6. குறள் 166
    கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉ மின்றிக் கெடும்.
  7. குறள் 167
    அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.
  8. குறள் 168
    அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.
  9. குறள் 169
    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்கேடும் நினைக்கப் படும்.
  10. குறள் 170
    அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்.