அறத்துப்பால் · இல்லறவியல் · அழுக்காறாமை

குறள் 164அழுக்காறாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்ஏதம் படுபாக் கறிந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

தீய வழியில் சென்றால் துன்பம் ஏற்படுமென்பதை அறிந்தவர்கள் பொறாமையினால் தீச்செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 33 · ஸ்கேன் 66 · மூலமும் சான்றும்