குறள் 167 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்தவ்வையைக் காட்டி விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 34 · ஸ்கேன் 67 · மூலமும் சான்றும்