குறள் 166 — அழுக்காறாமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்உண்பதூஉ மின்றிக் கெடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உதவியாக ஒருவருக்குக் கொடுக்கப்படுவதைப் பார்த்துப் பொறாமை கொண்டால் அந்தத் தீய குணம், அவனை மட்டுமன்றி அவனைச் சார்ந்திருப்போரையும் உணவுக்கும், உடைக்கும் கூட வழியில்லாமல் ஆக்கிவிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 34 · ஸ்கேன் 67 · மூலமும் சான்றும்