அறத்துப்பால் · இல்லறவியல் · அழுக்காறாமை

குறள் 162அழுக்காறாமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்அழுக்காற்றின் அன்மை பெறின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவருக்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 33 · ஸ்கேன் 66 · மூலமும் சான்றும்