அறத்துப்பால் · இல்லறவியல்
16. பொறையுடைமை
குறள் 151–160
- குறள் 151அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மைஇகழ்வார்ப் பொறுத்தல் தலை.
- குறள் 152பொறுத்த லிறப்பினை யென்றும் அதனைமறத்த லதனினும் நன்று.
- குறள் 153இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.
- குறள் 154நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமைபோற்றி யொழுகப் படும்.
- குறள் 155ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
- குறள் 156ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.
- குறள் 157திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று.
- குறள் 158மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்தகுதியான் வென்று விடல்.
- குறள் 159துறந்தாரின் தூய்மை யுடையர் இறந்தார்வாய்இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
- குறள் 160உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்இன்னாச்சொ நோற்பாரிற் பின்.