குறள் 157 — பொறையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்தறனல்ல செய்யாமை நன்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்பமுற்று வருந்தி, பதிலுக்கு அதே காரியங்களைச் செய்து பழிவாங்காமலிருப்பதுதான் சிறந்த பண்பாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 32 · ஸ்கேன் 65 · மூலமும் சான்றும்