குறள் 156 — பொறையுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒறுத்தார்க் கொருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்பொன்றுந் துணையும் புகழ்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
தமக்குக் கேடு செய்தவரை மன்னித்திடாமல் தண்டிப்பவருக்கு அந்த ஒருநாள் மட்டுமே இன்பமாக அமையும். மறப்போம் மன்னிப்போம் எனப் பொறுமை கடைப்பிடிப்போருக்கோ, வாழ்நாள் முழுதும் புகழ்மிக்கதாக அமையும்.
மூலம் · அச்சுப் பக்கம் 32 · ஸ்கேன் 65 · மூலமும் சான்றும்