அறத்துப்பால் · இல்லறவியல் · பொறையுடைமை

குறள் 153பொறையுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்வன்மை மடவார்ப் பொறை.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப்போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

மூலம் · அச்சுப் பக்கம் 31 · ஸ்கேன் 64 · மூலமும் சான்றும்