அறத்துப்பால் · இல்லறவியல்

15. பிறனில் விழையாமை

குறள் 141150
  1. குறள் 141
    பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்தறம்பொருள் கண்டார்க ணில்.
  2. குறள் 142
    அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடைநின்றாரிற் பேதையா ரில்.
  3. குறள் 143
    விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்தீமை புரிந்தொழுகு வார்.
  4. குறள் 144
    எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்தேரான் பிறனில் புகல்.
  5. குறள் 145
    எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்விளியாது நிற்கும் பழி.
  6. குறள் 146
    பகையாவும் அச்சம் பழியென நான்கும்இகவாவாம் இல்லிறப்பான் கண்.
  7. குறள் 147
    அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலாள்பெண்மை நயவா தவன்.
  8. குறள் 148
    பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
  9. குறள் 149
    நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்பிறற்குரியாள் தோள்தோயா தார்.
  10. குறள் 150
    அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்பெண்மை நயவாமை நன்று.