அறத்துப்பால் · இல்லறவியல்
14. ஒழுக்கம் உடைமை
குறள் 131–140
- குறள் 131ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.
- குறள் 132பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்தேரினும் அஃதே துணை.
- குறள் 133ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.
- குறள் 134மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.
- குறள் 135அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்க மிலான்கண் உயர்வு.
- குறள் 136ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்ஏதம் படுபாக் கறிந்து.
- குறள் 137ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்எய்துவ ரெய்தாப் பழி.
- குறள் 138நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்என்றும் இடும்பை தரும்.
- குறள் 139ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீயவழுக்கியும் வாயாற் சொலல்.
- குறள் 140உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்கல்லா ரறிவிலா தார்.