அறத்துப்பால் · இல்லறவியல் · ஒழுக்கம் உடைமை

குறள் 131ஒழுக்கம் உடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

ஒருவருக்கு உயர்வு தரக் கூடியது ஒழுக்கம் என்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிட மேலானதாகப் போற்றப்படுகிறது.

மூலம் · அச்சுப் பக்கம் 27 · ஸ்கேன் 60 · மூலமும் சான்றும்