குறள் 135 — ஒழுக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லைஒழுக்க மிலான்கண் உயர்வு.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது.
மூலம் · அச்சுப் பக்கம் 27 · ஸ்கேன் 60 · மூலமும் சான்றும்