குறள் 133 — ஒழுக்கம் உடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்இழிந்த பிறப்பாய் விடும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒழுக்கம் உடையவராக வாழ்வதுதான் உயர்ந்த குடிப்பிறப்புக்கு எடுத்துக்காட்டாகும். ஒழுக்கம் தவறுகிறவர்கள் யாவராயினும் அவர்கள் இழிந்த குடியில் பிறந்தவர்களாகவே கருதப்படுவர்.
மூலம் · அச்சுப் பக்கம் 27 · ஸ்கேன் 60 · மூலமும் சான்றும்